தேக்கு பிறப்பிடம்: தேக்கு மரம் இந்தியா மற்றும் ஜாவாவின் வட கிழக்குப் பகுதிகளை தாயமாகக் கொண்டது.
வாழ்நாள்: இயற்கை வனங்களில் 100 - 120 ஆண்டுகளுகம் செயற்கை வளர்ப்பில் 70-80 ஆண்டுகளும், மற்றும் 40 - 60 ஆண்டுகளுக்குப் பின் மறுதாம்பாகவும் வளரக்கூடியது.
காலநிலை மற்றும் மண்: வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல காலநிலையில் செழித்து வளரும். மணல் கலந்த இறுபொறைமண், 8.5க்கும் குறைவான கார அமில நிலையுள்ள, நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் சிறப்பாக வளரும்.
மழை: ஆண்டுக்கு 1000-1500 மி.மீட்டர் மழைப்பொழிவும், 750 மி.மீ. குறைவான மழைப்பொழிவுள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை தேக்கு மரத்திற்கு உண்டு.
நாற்றங்கால் செய்முறைகள்: 1000-1500 நாற்றுகளுக்கு 50 - 60% முளைப்புத் திறனுடைய 2.5 முதல் 3 கிலோ விதையானது தேவைப்படுகிறது. 2.5 செ.மீ. சுற்றளவு, கழுத்துப்பகுதி 2-3 செ.மீ மற்றும் 23 செ.மீ நீளமுடைய அடித்தண்டுப்பகுதி நாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இடைவெளி: 1.8X1.8 மீ மற்றும் 2X2 மீ இடைவெளி பொதுவாக கடைப்பிடிக்கப்படுகிறது. அடர்த்தி மிகும் பொழுது கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நடவு செய்தல்: நாற்பது நாள் வயதுடைய நாற்றுகள் நடவுக்கு ஏற்றவை. மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முன் நடவு செய்வது வெற்றி கரமானது. சதுர (அ) நேர்க்கோட்டு முறையில் நடவு செய்யலாம்.
45-60 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழமுடைய குழிகள் ஏதுவானது. அடித்தண்டு நடவிற்கு 15 செ.மீ. விட்டமுள்ள 30 செ.மீ. ஆழமுடைய குழிகளில் நடவு செய்யலாம்.
பயிர்பாதுகாப்பு:
பூச்சிதாக்குதல்: இலையுண்ணும் புழு (ஐபேலியா பெளரியா) மற்றும் இலை எலும்புக் கூடாக்கிப் புழு (யூடெக்டேடினா மகோராலிஸ்)
நோய்த்தாக்குதல்: இலைக்கருகல் (ரைசொக்டானியா சொலானி மற்றும் பழங்களின் மீது பூஞ்சான் தாக்குதல் (அல்டர்னேரியா சிற்றினம்).
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மிகுந்த இலைகளை வெட்டியகற்றி எரித்து விட வேண்டும். தேக்குத் தோப்புகளில் களைச் செடிகளை வளர விடக் கூடாது.
சிறப்புத் தன்மைகள்: தேக்கு மரத்தில் ‘டெக்டோல்’ எனும் பினால் சாறு உள்ளது. இது தண்டு அழுகல் மற்றும் கரையான் அரிப்பைத் தடுத்து விடுகிறது.
பயன்கள்: அனைத்து மர உபயோகங்களுக்கும் ஏற்றது. மரக்கட்டையின் கடினத்தன்மைக்காக தேக்கு மரம் “மரங்களின் அரசன்” என்று சிறப்பிக்கப்படுகிறது.
விளைச்சல்:
12 முதல் 26 கன மீட்டர் பருமனுள்ள கட்டை ஒரு ஆண்டுக்கு தரவல்லது.

0 comments :
Post a Comment
இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, Space கொடுத்தால் தமிழில் வார்த்தை காண்பிக்கபடும்.
பின் Ctrl + A மற்றும், Ctrl + C கொடுத்து.பின் கீழ் உள்ள (Enter your comment....)கமெண்ட் பாக்ஸில்
Ctrl + V கொடுத்தால்,போதும் பின் Publish கொடு.
*ஆங்கிலத்தில் காண்பிக்க Ctrl + g