மாதுளை
சாகுபடி செய்வது.
இரகங்கள் : ஜோதி, கணேஷ், கோ.1, ஏற்காடு , ருத்ரா, ரூபி,
மற்றும் மிருதுளா.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
• இது எல்லாவகை மண்களிலும் விளையும்.
• வறட்சி, கார
மற்றும் அமிலத் தன்மைக் கொண்ட
நிலங்களிலும் ஓரளவு தாங்கி வளரும்.
• இது மலைப் பகுதிகளில் 1800 மீட்டர் உயரம் வரை வளரும்.
• சிறந்த வகை மாதுறை இரகங்களைப் பனிக்காலத்தில்
குளிர் அதிகமாகுவம் கோடைக்கால்த்தில் உஷ்ணம் மிகுந்துள்ள பகுதிகளில் மட்டும்
வளர்க்க முடியும்.
• விதையும் விதைப்பும்
• நடவு செய்தல் : வெர் வந்த குச்சிகள் அல்லது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆன பதியன்கள் மூலம் பயிர் செய்யலாம்.
• 60 செ.மீ ஆழம், 60
செ.மீ அகலம், 60 செ.மீ நீளம் உள்ள குழிகளை 2.5 மீட்டர் முதல் 3
மீட்டர் இடைவெளியில் எடுக்கவேண்டும்.
• குழிகளில் தொழு உரம் மற்றும் மேல் மண் கலந்து நிரப்பி, ஒரு
வாரம் கழித்து குழியின் மத்தியில் வேர் வந்தக் குச்சிகளை நட்டு
நீர்ப்பாய்ச்சவேண்டும்.- நீர் நிர்வாகம்
- மாதுளையில் பழங்கள் உருவாகும்போது நன்கு நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து
மேலாண்மை
உரமிடுதல் : (செடி
ஒன்றிற்கு)
ஒரு வருடம்
- தொழு உரம் -10 தழைச் சத்து (கிராம்) -200 மணிச்சத்து (கிராம்) -100 மணிச்சத்து (கிராம்) – 400
2 முதல் 5 வருடம்
- தொழு உரம் -20 தழைச் சத்து (கிராம்) -400 மணிச்சத்து (கிராம்) -250 மணிச்சத்து (கிராம்) – 800
6 வருடங்களுக்குப் பிறகு
- தொழு உரம் -30 தழைச் சத்து (கிராம்) -600 மணிச்சத்து (கிராம்) -500 மணிச்சத்து (கிராம்) – 1200
- பின்செய் நேர்த்தி
- மாதுளை சாதாரணமாக பிப்ரவரி – மார்ச் மாதத்தில் பூ விட்டு ஜீலை , ஆகஸ்ட் மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு வரும். எனவே டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்யவேண்டும். உலர்ந்த, இறந்த, நோய் தாக்கிய கிளைகளை வெட்டிவிடவேண்டும். மேலும் செடியின் அடித்தூரில் இருந்து வளரும் புதுத் துளிர்களை வெட்டி எறியவேண்டும்.
- மாதுளையில் பழ வெடிப்பு : சீதோஷ்ண நிலையைப் பொருத்து சிறிய பிஞ்சுகளிலும். நன்கு முதிர்ந்த பழங்களிலும், பூ முனைப் பகுதிகளிலும் வெடிப்புகள் ஏற்படும். இவ்வாறு வெடிப்புகள் ஏற்பிட்ட பின்பு, பூச்சிகளிலும் நோய்களும் அப்பகுதியை தாக்கி சேதம் விளைவிக்கும். பழ வெடிப்பை தவிர்க்க ஜீன் மாதத்தில் ஒரு சத அளவில் கலந்த திரவ மெழுகுக் கரைசலை (ஒரு லிட்டருக்கு 10 கிராம் அளவில் கரைக்கவேண்டும்) 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
கட்டுப்பாடு
• சிறிய காய்களில் உள்ள பூ முனைப் பகுதியை
நீக்கவிடுவதால் அந்த இடத்தில் தாய் அந்துப்பூச்சி முட்டை இடாதவாறு செய்யலாம்.
அல்லது சிறிய காய்களையும், பழங்களையும் பாலித்தீன் பை அல்லது சிறிய துணிப்
பைகளால் மறைத்து கட்டிவிடவேண்டும்.
• வேப்பம் எண்ணெயை 3 சதவிகித அடர்த்தியில் 15
நாட்கள் இடைவெளியில் தாய் பட்டாம் பூச்சிகள் தென்படும் போது தெளிக்கவேண்டும்.
• முட்டை ஒட்டுண்ணிகள் எக்டருக்கு ஒரு லட்சம்
இடவேண்டும்.
• பொருளாதார சேதநிலை அறிந்தது தடுப்பு முறைகளை
மேற்கொள்ளவேண்டும்.
• எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது டைமித்தோயேட் 1.5 மி 1 லி தண்ணீர் தெளிக்கவேண்டும்.
• மகசூல் : செடிகள் நட்ட நான்காம் ஆண்டு பலன்
கொடுக்கத் துவங்கும் என்றாலும் 7 ஆண்டுகளுக்குப் பின்பு முழுப் பலனும்
கொடுக்கும். ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டரில் 20-25
டன்கள் மகசூல் எடுக்கலாம்.
நன்றி:
தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
0 comments :
Post a Comment
இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, Space கொடுத்தால் தமிழில் வார்த்தை காண்பிக்கபடும்.
பின் Ctrl + A மற்றும், Ctrl + C கொடுத்து.பின் கீழ் உள்ள (Enter your comment....)கமெண்ட் பாக்ஸில்
Ctrl + V கொடுத்தால்,போதும் பின் Publish கொடு.
*ஆங்கிலத்தில் காண்பிக்க Ctrl + g