இந்தியாவில்பல மாநிலங்களில் இஞ்சி சாகுபடி செய்யப்படுகிறது.மத்தியகிழக்கு சந்தைகளில் உலர்ந்தஇஞ்சிக்கு அதிகத் தேவை இருக்கிறது. உலர்இஞ்சியை இந்தியா தான் அதிகளவு ஏற்றுமதி செய்கிறது.
இஞ்சி ஒரு வெப்பமண்டலப்பயிராகும்.இந்த பயிர் நன்கு நீர் வடியும் பொறைத்தன்மையுடைய மண்களில் நன்றாக வளரும்.இஞ்சி அதிகளவு ஊட்டச்சத்துக்களைமண்ணிலிருந்து எடுப்பதால் தொடர்ந்து வருடாவருடம் பயிரிடக்கூடாது.அதனால், பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். நீர் தேங்கி நிற்கும் நிலையில்வளராது. நன்கு நீர் வடியும் மண்ணே சாகுபடி செய்ய ஏற்றது. அங்கக சாகுபடிசெய்யம் வயல்பழைய முறைப்படி சாகுபடி செய்யும் பண்ணையிலிருந்து 25 மீ.அகலத்துக்கு இடைவெளி விட்டுதனித்து இருக்க வேண்டும. ஒராண்டு பயிராகஇருப்பதால், 2 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றம்இருக்க வேண்டும். இஞ்சிஊடுபயிர் (அ) கலப்பு பயிராகவோ சாகுபடி செய்யலாம். பயிறு வகைப்பயிர்களுடன்பயிர் சுழற்சி செய்யலாம். இஞ்சி-வாழை-பயிறு வகை (அ) இஞ்சி-காய்கறிப் பயிர் -பயிறு வகைப் பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.
பயிரிடத்தேவையான மூலங்கள்
நோய் மற்றும்பூச்சியற்ற கிழங்குகளை பயிரிட ஏற்றது.அதிக மகசூல் தரக்கூடியஉள்ளூர் இரகங்களையும்அங்கக சாகுபடிக்கு பயன்படுத்தலாம். விதைக்கிழங்குகளை எந்த இராசயதனத்துடனும் விதை நேர்த்திசெய்யக் கூடாது.
நிலத்தைதயார் செய்தல் மற்றும் பயிரிடுதல்
குறைந்தபட்சஉழவு முறைகளை பயன்படுத்தலாம். விதைப்படுக்கைகள் 15 செ.மீ.உயரத்துடன், 1மீ அகலம், தேவைப்படும்நீளத்திற்கு 50 செ.மீ. இடைவெளி விட்டுதயார் செய்ய வேண்டும்.விதைப் படுக்கைகளை வெப்பமூட்டுவதால்பூச்சி மற்றும்நோய்க் கிருமிகளை அழிக்கலாம்.பாலித்தீன் சீட்கள் மண் வெப்பமூட்டுவதற்குபயன்படுத்தப்படுகிறது.விதைக்கும் போது, 25 கி வேப்பத்தூள் மண்ணுடன் கலந்துஒவ்வொருகுழிக்கும் இடவேண்டும்.20-25 செ.மீ. வரிசைகளுக்கு இடைவெளி விடவேண்டும்.விதை கிழங்குகளைஆழம் குறைந்த குழிகளில் நட்டு, நன்கு சிதைந்தமாட்டு எரு (அ) கம்போஸ்ட் உடன் டிரைக்கோடெர்மாவை 10 கிராம் கம்போஸ்ட் உடன்டிரைக்கோடெர்மாவை கலக்க வேண்டும், சேர்த்து இட வேண்டும்.
உழவியல்முறைகள்
பச்சை இலைகளைக்கொண்டு விதைப்படுக்கைகளை மூடாக்கு செய்ய வேண்டும். இதனால்விதை முளைப்புத் திறன் அதிகமாவதுடன், மண் அரிப்பும்தடுக்கப்படுகிறது.மேலும், அங்ககப் பொருளின் அளவு கூடுகிறது, ஈரப்பதற்குமண்ணில் அதிகரிக்கச் செய்கிறது.பசுந்தழைகளை கொண்டு முதல் மூடாக்கில் 10-12 டன் எக்டர்என்ற அளவில் விதைக்கும் காலத்தில் செய்ய வேண்டும். இதையே ஒருஎக்டரக்கு 5 டன் என்றஅளவில் பசுந்தழைகளைபயிரிட்ட 40 மற்றும் 90 வதுநாறில் செய்ய வேண்டும்.லேன்டனா காமரா மற்றும் லிட்டக்ஸ் நெகுண்டோவைபயன்படுத்துவதால்தண்டு துளைப்பானின் தாக்கத்தைக் குறைக்கலாம்.மாட்டு சாணி (அ) திரவ உரத்தை, விதைப்படுக்கைகளின் மீது ஒவ்வொரு மூடாக்கலுக்குப்பிறகு தெளிக்க வேண்டும். களை வளர்ச்சியைப்பொறுத்து களையெடுக்க வேண்டும்.சரியான தகுந்த வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
உரமிடுதல்
நன்கு சிதைந்தமாட்டு சாணி (அ) கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5-6 டன் என்றஅளவில் குழிகளில் கிழங்குகளைநடும் போது இட வேண்டும். ஊட்டமேற்றியகம்போஸ்ட்டையும் பயன்படுத்தலாம்.மேலும், வேப்பங்கட்டியைஒரு எக்டருக்கு 2 டன் என்றஅளவில் அளிக்கலாம்.
பயிர்பாதுகாப்பு
நோய்கள்
மென் அழுகல் (அ) கிழங்கு அழுகல் பித்தியம் அஃபேனிடெர்மேட்டம் என்ற நோய்க்காரணியால் ஏற்படும்.இந்த நோயகை் கட்டுப்படுத்த இஞ்சி சாகுபடி செய்யவயலைத்தேர்வு செய்யும்போதே நல்ல வடிகால் வசதியுடைய நிலத்தைத் தேர்வு செய்யவேண்டும்.விதைப் படுக்கைகளின்மீது வெப்பமூட்டுவதாலும் பூஞ்சாண்வித்துக்களை அழிக்கலாம்.இருந்தாலும்,நோய் தோன்றியிருந்தால் நோயுற்றகுத்துக்களை கவனமாக சேதம் ஏற்படாமல் அகற்ற வேண்டும்.விதைக்கும் போதுடிரைக்கோடெர்மாவைஇடலாம்.போர்டாக்ஸ் கலவையை (1%) நோயைக் கட்டுப்படுத்தஅளவாகப் பயன்படுத்த வேண்டும்.
சூடோமோனஸ்சொலானேஸ்சியேரம் என்ற நோய் காரணியால் ஏற்படும் பாக்டீரியா வாடல்நோயைக் கட்டுப்படுத்தவிதைக் கிழங்குகளை 200 ஸ்ட்ரப்டோசைக்ளி 30 நிமிடங்கள் நேர்த்தி செய்து, நிழலில் உலர்த்திபின் விதைக்கவேண்டும்.வயலில் நோய் தோன்றியவுடன்,போர்டாக்ஸ் கலவையை (1%) விதைப்படுக்கைகளின்மீது ஒரே மாதிரி நனையும் படி தெளிக்க வேண்டும்.
சீரான வயல்ஆய்வு மற்றும் கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்வதால் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.கோனோகீத்தஸ் பங்டிபெராலிஸ் என்ற தண்டுதுளைப்பான் ஜீலை அக்டோபர் மாதத்தில் தோன்றும்.இதைக் கட்டுபடுத்தபூச்சிதாக்கிய செடிகளை அகற்ற வேண்டும்.தண்டுப்பகுதியை வெட்டி, புழுக்களைவெளியே எடுத்து,அழிக்க வேண்டும்.வேப்ப எண்ணெய் (0.5%) 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.விளக்குப் பொறியை வயலில் வைப்பதால் தாய் அந்துப்பூச்சிகளைஅழிக்கலாம்.
அறுவடைமற்றும் அறுவடைபின் சார் முறைகள்
எட்டு முதல்பத்து மாதங்களில் இந்தப் பயிர் அறுவடைக்கு தயாராகி விடும்.முதிர்ந்த இலைகள் மஞ்சள்நிறமாக, மெது மெதுவாக காய ஆரம்பிக்கும்.அப்பொழுதுகுத்துக்களை கவனமாக, சேதம் ஏதும்ஏற்படாமல் கிழங்குகளை தோண்டி எடுக்கவேண்டும்.பின் காய்ந்த இலைகள்,வேர்கள், கிழங்கைச் சுற்றியிருக்கும் மண்ணைஅகற்ற வேண்டும், ஒருஎக்டருக்கு 15 முதல் 20 டன் அளவு மகசூல்இருக்கும்.காய்கறி இஞ்சிக்கும், 6மாதத்திலிருந்தே அறுவடை செய்யலாம்.அறுவடை செய்த இஞ்சிகளை நன்றாக நீரில் 2-3 முறைகழுவி, சூரிய ஒளியில்உலர்த்த வேண்டும்.
காய்ந்த இஞ்சிதயாரிப்பதற்கு, அறுவடை செய்த இஞ்சிகளை ஒரு நாள் இரவுமுழுவதும் ஊற வைத்து, கிழங்குகளைநன்றாக உரைக்க வேண்டும்.சுத்தம் செய்தபிறகு, நீரிலிருந்து வெளியே எடுத்து,வெளித்தோலை கத்தி (அ) குச்சி கொண்டோகரண்டி எடுக்க வேண்டும்.காய்ந்த இஞ்சிகளை ஒன்றோடொன்றுஉராய்ப்பதால்கடைசித் தோல் வரை உரிந்து வரும்.பின் கிழங்குகளை 11% ஈரப்பதம் இருக்கும்அளவு உலர்த்தி, சேமிக்க வேண்டும்.உலர் இஞ்சியை அதிக காலத்திற்கு சேமிக்கமுயாது. உலர்இஞ்சியின் மகசூல் 16-25% புத்தம் புது இஞ்சியை விட அதிகமாகஇருக்கும். பதப்படுத்த கந்தகத்தைஎரிக்கக் கூடாது.
விதைக்கிழங்குகளைப் பாதுகாத்தல்
விதைக்காகப்பயன்படுத்தும் கிழங்குகளை கவனமாக பாதுகாக்க வேண்டும். உள்ளூர்முறைகளான கிளைகோமைஸ் (மலையாளத்தில் ‘பனால்’ என்று அழைப்பர்) பென்டாபில்லாஎன்ற செடியின் இலைகளை ஒன்றன் மேல்ஒன்றாக அடுக்க வைக்க வேண்டும்.குழிகளில் நிழலின் அடியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.விதைப்பயன்பாட்டிற்காக, அறுவடை செய்தவுடனேயே பூச்சி நோயுற்ற விதைக் கிழங்குகளைதேர்ந்தெடுக்கவேண்டும். விதைக்கிழங்குகளை குழிகளில் வைத்து வெயில், மழைபடாதவாறு பாதுகாக்க வேண்டும்.குழிகளின் பக்கச் சுவர்களின் சாணத்தை பூசவேண்டும். விதைக் கிழங்குகளை குழிகளில் வைக்கும்போது உலர் மணல் (அ)மரத்தூள் கொண்டு அடக்கடுக்காக அமைக்க வேண்டும். குழிகளின் மீதுகாற்றோட்டத்திற்காக போதுமான இடைவெளி விட வேண்டும். குழிகளை மரக்கட்டைகொண்டு மூடவேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை குழிகளை ஆய்வு செய்யவேண்டும். மணல் (அ) நெல் உமி, காய்ந்த இலைகள் கொண்டோ கிழங்குகளை மூடலாம்.
0
comments
:
Post a Comment
தமிழ் தட்டச்சு இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, Space கொடுத்தால் தமிழில் வார்த்தை காண்பிக்கபடும். பின் Ctrl + A மற்றும், Ctrl + C கொடுத்து.பின் கீழ் உள்ள (Enter your comment....)கமெண்ட் பாக்ஸில் Ctrl + V கொடுத்தால்,போதும் பின் Publish கொடு. *ஆங்கிலத்தில் காண்பிக்க Ctrl + g
0 comments :
Post a Comment
இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, Space கொடுத்தால் தமிழில் வார்த்தை காண்பிக்கபடும்.
பின் Ctrl + A மற்றும், Ctrl + C கொடுத்து.பின் கீழ் உள்ள (Enter your comment....)கமெண்ட் பாக்ஸில்
Ctrl + V கொடுத்தால்,போதும் பின் Publish கொடு.
*ஆங்கிலத்தில் காண்பிக்க Ctrl + g